ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் நாள். எய்ட்ஸ் நோய், தற்போதைய அளவில், மிகக்கொடிய நோயாக உள்ளது. எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில், திரை நட்சத்திரங்கள் பங்கேற்றால், மக்களை எளிதில் சென்றடையும் என்பதற்காகவே இந்த பதிவு
ஜஸ்வீர் கவுர்
ஒரு சமயத்தில் கவனக்குறைவாக இருந்துவிட்டு, பின் வாழ்க்கை முழுவதும் அழுதுகொண்டு இருக்க வேண்டியுள்ளது. மக்களின் கவனக்குறைவே, இதற்கு முழு முக்கிய காரணம். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வில், திரை நட்சத்திரங்கள் பங்குபெறுவது, மக்கள், அந்நிகழ்ச்சியை பார்க்கத்தூண்டும், பின்பற்றத் தூண்டும். எனவே திரைநட்சத்திரங்கள், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தான் ஆதரிப்பதாக கூறினார்.
ரவி துபே
எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், திரைநட்சத்திரங்கள் பங்கேற்பது, மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எய்ட்ஸ் நோய், மற்ற நோய்களை விட அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை கொடிய நோய் என்கிறோம். நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப, தற்போது எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக, பிரபல டாக்டரின் செய்திக்குறிப்பில் படித்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், எய்ட்ஸ் நோய், குணப்படுத்தக்கூடிய ஒன்று தான். போதிய விழிப்புணர்வு இருந்தால், நோயை முற்றிலும் தடுக்கலாம்.
விவியன் ட்சேனா
மக்கள், திரைநட்சத்திரங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதால், திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ரஷாமி தேசாய்
எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தற்போது இன்றியமையாத ஒன்று ஆகும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தான் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். ஷாரூக் மற்றும் ஹிருத்திக் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்தி்க்கொள்ள வேண்டும்.
டினா தத்தா
எய்ட்ஸ் என்பது கொடிய நோய். டிவி மற்றும் அச்சு ஊடகங்கள் மட்டுமல்லாது, தியேட்டர்களில், புகை பிடிப்பது தடுக்கும் வகையிலான ஆவணப்படங்கள் திரையிடப்படுவது போன்று, எய்ட்ஸ் நோய் குறித்த ஆவணப்படங்களையும் காட்ட வேண்டும்.
மேக்னா மாலிக்
எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, தற்போதைய நிலையில், இன்றியமையாத ஒன்றாகும். இதுகுறி்த்து, பள்ளி உள்ளிட்ட கல்விநிலையங்களிலும், மாணவர்களிடையேயும், வீடுகளில், பெற்றோர்கள், குழந்தைகளிடமும் இதுகுறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இதுபோன்ற விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால், பாமர மக்களையும் சென்றடையும். இதுதொடர்பான, நாடகங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்டவைகளை அதிகளவில் வெளியிடப்பட வேண்டும். பொதுஇடங்களில், பேனர்கள் வைப்பதன் மூலம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் விழிப்புணர்வை கொண்டு செல்லலாம்.
வாபிஜ் டொராபாஜி
இந்திய மக்களுக்கு, எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிச்சயமாக தேவை. பள்ளிகளில் பாலியல் கல்வி கற்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் பாதிப்பு குறித்த விபரங்களை, இளைய தலைமுறையினர், பள்ளிகளிலேயே தெரிந்து கொள்ள வழிவகை செய்தல் வேண்டும்.
அங்கித் கேரா
இந்தியாவில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளார்கள். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை, மாணவர்கள், பள்ளிகளிலேயே தெரிந்து கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் விளம்பர படங்கள் மூலமும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.