ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு காலத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு-சமந்தாவுக்கிடையே பகை உணர்வு பற்றிக்கொண்டு எரிவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. காரணம், மகேஷ்பாபு நடித்த ஒரு படத்தின் போஸ்டரில் அப்பட நாயகி, அவரது காலடியில் ஊர்ந்து செல்வது போன்று வெளியானதற்கு எதிர்ப்பாக சமந்தா கருத்து கூறியிருந்தார்.
குறிப்பாக,பெண்களை மட்டம் தட்டுவது போன்று அது அமைந்திருப்பதாக கூறினார். இதனால் மகேஷ்பாபு மட்டுமின்றி, அவரது ரசிகர்களும் சமந்தாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், கருத்து சொல்வது எனது உரிமை அதை யாரும் தடுக்க முடியாது என்று டுவிட் செய்த சமந்தாவை அடக்க நினைத்த மகேஷ்பாபு தான் தெலுங்கில் நடித்த ஒரு படத்தில் அவரை தனக்கு ஜோடியாக்கினார்.