தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த படம்தான் சிகப்பு ரோஜாக்கள். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தைத்தான் தற்போது இயக்கிக்கொண்டிருக்கிறார் நடிகர் மனோஜ். அந்த படத்தை தனது மனோஜ் கிரியேசன்ஸ் சார்பில் அவரே தயாரிப்பவர், டைட்டீலுக்கு முன்பு பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள்-2 என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு, தனது பெயரையும் மனோஜ் பாரதிராஜா என்று குறிப்பிட்டுள்ளார் மனோஜ். இதனால் படப்பிடிப்பு தொடங்கிய நாளன்று சென்னை நகரமெங்கும் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் அப்படத்திற்கு பெரிய பப்ளிசிட்டி கிடைத்துள்ளது. அதோடு, அந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
காரணம், கமலின் விஸ்வரூபம் படத்தின் போஸ்டரில், கையில் துப்பாக்கியுடன் கமல் நடந்து வருவார். அதில் புறாக்கள் பறப்பது போன்று டிசைன் வடிவமைத்திருந்தார். இப்போது இந்த சிகப்பு ரோஜாக்கள்-2 படத்திற்காக மனோஜூம் கிட்டத்தட்ட அதே சாயலில்தான் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். ஆனால், விஸ்வரூபம் போஸ்டரில் புறாக்கள் பறந்த இடத்தில், இப்போது பெண்களின் உருவம் இடம்பெற்றிருக்கிறது. மேலும், கமலின் கையில துப்பாக்கி இருந்தது போன்று, இந்த போஸ்டரில் புதுமுக நடிகர் விசாகனும் துப்பாக்கியை வைத்தபடிதான் போஸ் கொடுக்கிறார்.