எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
தமிழில் சினேகிதியே, நான் அவனில்லை உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் ஸ்வேதா மேனன். 1991ல் அனஸ்வரம் என்ற மலையாள படத்தில் கவர்ச்சிகரமாக நடித்து முதல் படத்திலேயே பரபரப்பை ஏற்படுத்திய இவர், அதையடுத்து மலையாளம், இந்தியில் ஏராளமான படங்களில் நடித்தார். அப்படி நடித்த பெருவாரியான படங்களில் கவர்ச்சி புயலாகத்தான் நடித்திருந்தார்.
அவரது கவர்ச்சியை மையமாக வைத்து உருவான சில படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வசூலில் சக்கைப்போடு போட்டன. ஆனால், 2011ல் திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட பிறகு கவர்ச்சி கதவுகளை இறுக மூடிக்கொண்டு நடித்து வருகிறார் ஸ்வேதாமேனன். அவரது கவர்ச்சிக்காகவே தியேட்டருக்கு வந்த மலையாள ரசிகர்கள் இப்போது அவரது செண்டிமென்டான நடிப்பையும் ரசிக்கிறார்களாம்.