டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தி.மு.க.வை விட்டு விலகிய பின் கொஞ்ச காலம் அரசியலை விட்டு விலகியிருந்த குஷ்பு, சில தினங்களுக்கு முன் டெல்லிக்குக் சென்று, ராகுல், சோனியா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். குஷ்பு, காங்கிரசில் இணைந்ததைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமாக கிண்டல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ரஜினிகாந்தைப் பற்றி கிண்டலடிக்கும் விதமாக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
நேற்று காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது ரஜினிகாந்தின் அரசியல் பற்றிய பேச்சைக் கிண்டலடிக்கும் விதமாகப் பேசியிருக்கிறார். “வரணும்னு நினைச்சால் அரசியலுக்கு வரணும். வாங்க வாங்கன்னு கைய பிடிச்சி கூப்பிட்டிருக்க முடியாது. அரசியல் வேணுமா வேணாமான்னு அவங்கதான் முடிவு செய்யணும். அரசியல் என்பது திரையுலகம் கிடையாது. ஒரு படம் ரீலீஸ் ஆகி ஹிட்டாகும், சில படம் பிளாப் ஆகும், அப்புறம் வேற படம் கூட பண்ணிக்கலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹிட் கிடைக்கும்னு எதிர்பார்க்க முடியாது,” பத்திரிகையாளர்களிடம் குஷ்பு தெரிவித்துள்ளார்.