தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்சினிமா வரலாற்றில் வியாபாரத்திலும், வசூலில் புதிய உச்சத்தைத்தொட்டு சாதனை நிகழ்த்துவது ரஜினி நடிக்கும் படங்கள்தான். ரஜினி படம் ஆரம்பிக்கும்போதே அப்படத்தின் வியாபாரம் தொடர்பான பேரங்களும் பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துவிடும். இதற்கு லிங்காவும் விதிவிலக்கில்லை. தமிழ்நாடு உட்பட வட இந்தியா, வெளிநாடு ஆகியவற்றின் வெளியீட்டு உரிமையை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சுமார் 165 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. இதுவரை எந்த தமிழ்ப்படத்திற்கும் இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டதில்லை. ஈராஸ் நிறுவனத்திடமிருந்து, லிங்கா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை (கோவை ஏரியா நீங்கலாக) வேந்தர் மூவிஸ் நிறுவனம் 70 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. இதுவும் ஒரு சாதனைதான். தமிழக வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸுக்கு விற்பதற்கு முன்பே, கோவை ஏரியாவின் வெளியீட்டு உரிமையை சுக்ரா ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்துக்கு 15 கோடிக்கு விற்றுவிட்டது ஈராஸ். லலிதா ஜுவல்லர்ஸ்தான் சுக்ரா ஃபிலிம்ஸ் என்ற பெயரில் லிங்காவின் கோவை ஏரியாவை வாங்கி உள்ளது. இதற்கு முன்பு கத்தி படத்திற்கு கொடுக்கப்பட்ட 8.5 கோடி ரூபாய்தான் இந்த ஏரியாவின் அதிகபட்ச ரைட்ஸ் தொகை. இதனை லிங்கா இப்போது முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. கோச்சடையான் படத்தின் தோல்வியினால் அப்செட்டாகி இருக்கும் ரஜினி, லிங்காவின் வெளியீட்டை மிகப் பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறாராம். தமிழகத்தில் தற்போது ரிலீஸ் சென்டராக ஒடிக் கொண்டிருக்கும் 850 தியேட்டர்களில் 700க்கும் அதிகமான தியேட்டர்களில் லிங்கா படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்கு முன்பு, பில்லா 2, எந்திரன் படங்கள்தான் 500க்கும் மேற்பட்ட திரையரங்குளில் தமிழகத்தில் வெளியானது. அந்த சாதனையை ரிலீஸிற்கு முன்பே லிங்கா முறியடிக்க உள்ளது. ரிலீஸிற்குப் பிறகு வசூலிலும் லிங்கா பல சாதனைகள் படைக்கும் என்று நம்புகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.