தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள படத்தில் ஹீரோயினிகளாக ஹன்சிகா, மதுரிமா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், மாஜி ஹீரோயினிகளான ரம்யா கிருஷ்ணன், கிரணும் முக்கியத்துவம் வாய்ந்த காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அந்த படத்தைத தொடர்ந்து சிம்பு நடித்து வரும் வாலு படத்திலும் கதாநாயகியாக ஹன்சிகா நடிக்க, முன்னாள் ஹீரோயினிகளான செளகார் ஜானகி, மீனா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்களாம். ஆனால், இவர்களை கேரக்டர்களில் நடிக்க வைக்கவில்லையாம். தாறுமாறு என்று தொடங்கும் ஒரு பாடலில் சிம்பு-ஹன்சிகாவுடன் சேர்ந்து அந்த மாஜி நடிகைகளும் நடனமாடுகிறார்களாம்.
இதில் வல்லவன் படத்தில் நயன்தாராவுடன் ஆடியது போன்று ஹன்சிகா சிம்பு ஆட, மற்ற நடிகைளோ தங்களது பாணியில் நடனமாடுகிறார்களாம். ஒருகட்டத்தில் அனைவரும் கலந்து ஆடுகிறார்களாம். டிசம்பர் 24-ந்தேதி வாலு படத்தை வெளியிடுவதாக அறிவித்து விட்ட சிம்பு, இன்னும் சில நாட்களில் அந்த தாறுமாறு பாடலில் தாறுமாறான ஆட்டமாட இப்போது தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.