பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
பாக்யராஜ் என்றாலே முருங்கைக்காய்தான் ஞாபகத்துக்கு வரும். அது மட்டுமின்றி தான் இயக்கும் படங்களில் மறைமுகமாக செக்ஸ் அட்டாக் கொடுக்கக்கூடியவர். அவர் படங்களில் வரும் செக்சியான காட்சிகள், டயலாக்குகளை ரசிக்கும் பெண் ரசிகைகளே ஏராளம். அதோடு, பேமிலி செண்டிமென்டிலும் பின்னி எடுக்கும் பாக்யராஜ், முதன்முறையாக அரசியல் கதையை கையிலெடுத்திருக்கிறார்.
துணை முதல்வர் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதி நாயகனாகவும் நடித்திருக்கிறார். முதன்முறையாக அரசியல் பேசி நடிக்கும் பாக்யராஜ், சமீபகாலமாக சட்டசபையில் நடக்கும் வேஷ்டி கிழிப்பு, அடிதடி காட்சிகளையும் காட்சி பண்ணியிருக்கிறாராம். அதேசமயம், தனக்கான செக்ஸ் குசும்புகளை அவர் விடவில்லையாம்.