இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கே.பாக்யராஜ் இயக்கிய டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்தவர் பூர்ணிமா ஜெயராம். அந்த படத்தில் காதல் கதையில் நடித்த அவர்களுக்கிடையேயும் காதல் மலர்ந்தது. அதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அப்படி அவர்கள் திருமணம் நடைபெறுவதற்கு சுகாசினிதான் காரணமாம்.
இதுபற்றி சுகாசினி கூறுகையில், பாக்யராஜ் இயக்கிய படங்களை நான் ரொம்பவே ரசித்திருக்கிறேன். சில படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே அவர் படங்களை பார்க்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். பின்னர் நானும் வளர்ந்தபோது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. இந்நிலையில், பாக்யராஜ் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தை இயக்கியபோது அதில் நாயகியாக நடிக்க என்னைதான் அழைத்தனர். ஆனால், நான் அந்த சமயத்தில் வேறொரு படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்ததால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் பூர்ணிமா ஜெயராம் அந்த படத்தில் கமிட்டானார்.
அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டிருககிறது. விளைவு அந்த படத்தில் நடித்து முடிந்ததும் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஆக, நான் அந்த படத்தில் நடித்திருந்தால் அவர்கள இணைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. இல்லையேல் அவர்கள் தாமதமாக காதலித்து கல்யாணம் செய்திருக்கலாம். அந்தவகையில, அவர்கள் சீக்கிரமே இணைந்ததற்கு நான்தான் காரணம் என்றார் சுகாசினி.