பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் படங்கள் என்றாலே காதல், ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி, நடனம் என அனைத்து ஜனரஞ்சகமான விசயங்களும இருக்கும். அதனால்தான் அவர் படங்கள் பெருவாரியான ரசிகர்களுக்கு பிடிக்கிறது. அவரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக அந்த மாதிரியான கதைகளாகவே பெரும்பாலும் செலக்ட் பண்ணி நடிக்கிறார்.
அந்த வகையில், ரசிகர்களுக்குத்தான் விஜய் படம் பிடிக்கிறது என்றால் சீயான் விக்ரமுக்கும் விஜய் நடிக்கும் படங்கள் ரொமப பிடிக்குமாம். அதனால் அவர் நடித்த படங்களை தவறாமல் தான் பார்த்து ரசித்து விடுவதாக சொல்கிறார் விக்ரம்.
இதுபற்றி அவர் கூறுகையில், முதலில் விஜய் எனது நண்பர் என்கிற முறையில்தான் அவரது படஙகளை பார்க்கத் தொடஙகினேன். ஆனால், அவர் தேர்ந்தெடுத்து நடிககும் கதைகள் ரொம்ப ஜாலியாக கலகலப்பாக இருக்கும். அதனால் இப்போது விஜய் படம் வருகிறது என்றால் அதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று கூறும் விக்ரம், முதலில் விஜய்யின் நண்பராக மட்டுமே இருந்த நான் இப்போது அவரது ரசிகராகவும் மாறிவிட்டேன் என்கிறார்.