வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய்சேதுபதி என்றாலே வித்தியாசம் என்று சொல்லப்படுவதை ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டீசரும் நிரூபித்துவிட்டது. வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டீஸர் நேற்று (நவம்பர் 26) வெளியானது. விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் இப்படத்தை பிஜு விஸ்வநாத் இயக்குகிறார். யுடியூபில் நேற்று வெளியான ஆரஞ்சு மிட்டாய் டீஸருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதாவது, ஆரஞ்சு மிட்டாய் டீஸர் வெளியாகி முழுசாக 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே 2.40 லட்சம் பார்வையாளர்கள் ஆரஞ்சமிட்டாய் டீசரை பார்த்திருக்கின்றனர்.
தன் படத்துக்குக் கிடைத்த இத்ந அபார வரவேற்பை எண்ணி சந்தோஷத்தில் மிதக்கிறார் விஜய் சேதுபதி. ஆரஞ்சு மிட்டாய் படம் எப்படி இருக்கப்போகிறதோ தெரியவில்லை...ஆனால் இப்படத்தின் டீஸரை வித்தியாசமாக உருவாக்கி உள்ளனர். அதுதான் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. திரும்ப திரும்ப பார்க்க வைத்திருக்கிறது. தன் படத்தைப் பற்றி விஜய் சேதுபதியே சொல்வது போலவும், அதை இன்னொரு விஜய் சேதுபதி இடையிடையே புகுந்து கலாய்ப்பதைப் போலவும் இந்த டீஸரை உருவாக்கியிருக்கிறார்கள். அதோடு இந்த டீஸரில் வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி போடும் குத்தாட்டமும் செமத்தியாக இருக்கிறது. விஜய் சேதுபதியிடமிருந்து நாங்கள் இதுபோன்ற படங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் என ஃபேஸ்புக், ட்விட்டர் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.