பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு |
சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் இயக்குனராக அவதரித்தவர் கே.பாக்யராஜ். அதோடு தனது படங்களில் தானும் நாயகனாக நடித்து வந்தவர். அந்த வகையில்,. இதுவரை 35 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். இருப்பினும் சித்து ப்ளஸ் -2 படத்தின் தோல்வி பாக்யராஜை சற்று தடுமாற வைத்து விட்டது. அதனால் சிலகாலம் படம் இயக்குவதில் இருந்து விலகி, சில படங்களில் நடித்து வந்த அவர், தற்போது துணை முதல்வர் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதி நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவருடன் இன்னொரு ஹீரோவாக மலையாள நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். அவர்களுக்கு ஜோடியாக, ஸ்வேதா மேனன், காதல் சந்தியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தை ரா.விவேகானந்தன் என்ற புதியவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவை பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.
மேலும், சாதாரணமாக ஆடியோ விழாக்களில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர்தான் அதிகமாக இடம்பெறுவார்கள். அந்த படங்களில நடித்த நடிகைகள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் இந்த பட விழாவில், தன்னுடன் கதாநாயகியாக நடித்த சில நடிகைகளை கெளரவப்படுத்தும் வகையில், அவர்களை மட்டுமே மேடையில் அமர வைத்தார் பாக்யராஜ்.
அந்த வகையில், அவரது மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, ரோகினி, ரேகா, மீனா, ஊர்வசி, வடிவுக்கரசி ஆகியோரும், அவருடன நடிக்காத ஸ்ரீப்ரியா, சுகாசினி ஆகிய முன்னாள் கதாநாயகிகளும் இடம்பெற்றனர். ஆக, தனது பட விழாவில் பெண்களுக்கு மட்டுமே முக்கசியத்துவம் கொடுத்து விழாவை சிறப்பாக நடத்தினார் கே.பாக்யராஜ். முக்கியமாக படத்தில் நடித்த இன்னொரு நடிகரான ஜெயராம் மட்டுமே மேடையில் அமர, பாக்யராஜ் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்த்ககது.