'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரைசிங் சன் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் 1 பந்து 4 ரன் 1 விக்கெட் படம் கிரிக்கெட்டை மையமாக கொண்ட படம் அல்ல என்கிறார் அதன் இயக்குனர் வீரா. அவர் மேலும் கூறியதாவது:
இது காமெடி த்ரில்லர் படம். படத்தின் ஹீரோ ஒரு கிரிக்கெட் பைத்தியம் எப்போது பார்த்தாலும் டி.வியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு திருமணம் நடக்கிறது. புது மனைவியுடன் ஒரு ரெசார்ட்சுக்கு தேனிலவு கொண்டாடச் செல்கிறான். அன்று இரவு கணவனுடன் மகிழ்ச்சியாக இருக்க மனைவி எல்லா ஏற்பாடும் செய்து வைக்கிறாள்.
அன்று இரவு டி.வியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் இறுதி போட்டியை டி.வியில் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தியா ஜெயிக்க 4 ரன் தேவைப்படுகிறது. ஒரு பால்தான் கையில் இருக்கிறது. ஒரு விக்கெட்தான் இருக்கிறது. கடைசி பந்தை இந்திய வீரர் எதிர்கொள்ளும் அந்த கடைசி விநாடியில் ஹீரோவுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பல பல திகிலூட்டும் சம்பவங்கள் அது என்ன என்பதுதான் படத்தோட கதை.