Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிசம்பரில் ஒரு 'மெகா' போட்டி...

28 நவ, 2014 - 11:27 IST
எழுத்தின் அளவு:

ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா', டிசம்பர் 12ம் தேதிஅவருடைய பிறந்தநாளன்று வெளியாக உள்ளதால், அதற்கு முன்பும், பின்பும், மற்ற புதிய படங்கள் வருவது தள்ளிப்போடப்பட்டு விட்டது. திரையரங்கு உரிமையாளர்களே, ரஜினிகாந்த் படத்திற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதால், மற்றவர்கள் போட்டியிலிருந்து சுத்தமாக ஒதுங்கிவிட்டார்கள். இருந்தாலும், தற்போது வெளிவரும் எந்தப்படங்களாக இருந்தாலும், அவற்றின் ஜீவன் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால், டிசம்பர் மாதக்கடைசியில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, சில புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.


இப்போதைய நிலவரப்படி, தனுஷ், அமிரா நடிக்கும் 'அனேகன்', ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் 'மீகாமன்', சிம்பு, ஹன்சிகா நடிக்கும் 'வாலு', சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிக்கும் 'காக்கிச்சட்டை', விக்ரம்பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் 'வெள்ளைக்காரதுரை', விஜய்சேதுபதிநடிக்கும் 'ஆரஞ்சுமிட்டாய்', பிரபுசாலமன் இயக்கியுள்ள 'கயல்', ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'டார்லிங்' என பல படங்கள் வெளிவரத் தயார் நிலையில் உள்ளன.


இவ்வளவு படங்களுக்கும் திரையரங்குகள் கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் அனைவருமே எப்படியும் 'லிங்கா' வெளியீட்டுத் தேதிக்கும், பொங்கலுக்கும், முன்னதாகக் கிடைக்கும் இரண்டு வார இடைவெளியில் அவர்களது படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம். ஒருவேளை, டிசம்பரில் வெளியிடாமல் போனால், அதோடு ஜனவரிமாதஇறுதியில், தான் படத்தை வெளியிட வேண்டிவரும். அப்போது, கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்' படம் வந்தால் என்ன செய்வது என்றும் தவிக்கிறார்களாம்.


எந்த ஆண்டும் இல்லாதஅளவிற்கு, இந்த ஆண்டு எண்ணற்ற படங்கள் தயாராகியுள்ள நிலையில், படங்களை வெளியிட போதிய அளவு திரையரங்குகள் இல்லாததே, இந்தத் திண்டாட்டத்திற்கு காரணம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in