Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காவியத் 'தலைவனுக்கு' வாழ்த்து சொல்லும் சமந்தா...

28 நவ, 2014 - 11:25 IST
எழுத்தின் அளவு:

தாங்கள் நடிக்கும் படங்களைத்தவிர, மற்ற படங்களை எப்போதுமே திரையுலகத்தில் உள்ள பலரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தங்களது நண்பர்கள், மனம் கவர்ந்தவர்கள் போன்றவர்கள் நடிக்கும் படங்களைப் பற்றி மட்டும் அவ்வப்போது, ஏதாவது பேசுவார்கள். மனம் கவர்ந்தவர்களின் படம் என்றால், சொல்லவே வேண்டாம். அவர்கள் நடிக்கும் படங்களுக்கு எப்படி ஒரு முக்கியம் கொடுப்பார்களோ, அப்படி ஒரு முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள்.இப்படித்தான் 'காவியத்தலைவன்' படத்திற்கு, சமர்த்தாக விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார் அந்தப்படத்தில் நடிக்காத சமந்தா.


அவரின் மனம் கவர்ந்த சித்தார்த் நாயகனாக நடிக்கும் படம் என்பதாலும், தமிழில் அவர் இந்தப்படத்தை, மிகவும் திருப்புமுனையாக நினைக்கும் படம் என்பதாலும், இந்தப்படம் மீது, சமந்தா தனிக்கவனம் செலுத்தி வருகிறார். “காவியத்தலைவன்' குழுவினருக்கு எனது வாழ்த்துகள். படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.'சண்டிக்குதிரை...' பாடல் என் மனம் கவர்ந்த அபிமான பாடல்,” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 'காவியத்தலைவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும், சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


இன்று வெளியாகும் 'காவியத்தலைவன்' படம், சுதந்திர காலத்திற்கு முந்தைய நாடகக் கம்பெனிகளைப் பற்றிய ஒரு கதையை மையமாகக்கொண்டு, எடுக்கப்பட்டுள்ள படம். சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in