இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு காமெடி படம் ஓடி விட்டால், அதன்பிறகு காமெடி படங்களாக தயாராகும் கோலிவுட்டில், காஞ்சனா, யாமிருக்க பயமே ஹிட்டுக்கு பிறகு இப்போது பேய் படங்களாக தயாராகிக்கொண்டிருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் திகில் மயமாகி டோட்டல் கோடம்பாக்கத்தையே பேய் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், நாணயம் படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிபிராஜ், நாய்கள் ஜாக்கிரதை படத்தில் ஒரு நாயை நம்பி களமிறங்கி தற்போது வெற்றியும் கண்டிருக்கிறார். குழந்தைகளை தியேட்டர்களுக்கு இழுத்துள்ள அந்த படம் சிட்டியை விட வெளியூர்களில் பெரிய வெறறியை பெறறிருக்கிறதாம்.
விளைவு, சிபிராஜை போன்று மார்க்கெட் இல்லாமல் பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் இளவட்ட ஹீரோக்களின் கவனம் இப்போது நாய், பூனை, குதிரை என மிருகங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதனால் தங்களிடம் திகில் கதைகளுடன் வந்த டைரக்டர்களை மிருகம் சம்பந்தப்பட்ட கதைகளுடன் வருமாறு சில ஹீரோக்கள் திருப்பி விட்டுள்ளனர். அதனால், நாய்கள் ஜாக்கிரதை படத்தையடுத்து, புலிகள் ஜாக்கிரதை, பூனைகள் ஜாக்கிரதை என்ற பெயரில் புதிய படங்கள் அணிவகுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.