இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
நடிகர் அஜித் - இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூட்டணி 'பில்லா' படத்தில் முதன் முறையாக இணைந்த்து. 2007ம் ஆண்டில் வெளிவந்த 'பில்லா' படம் அஜித்தின் பட வரிசையில் மிகவும் ஸ்டைலிஷான ஒரு படமாக அமைந்தது. ஒரு ஆங்கிலப் படம் போல அமைந்த அந்தப் படத்தை இயக்கிய விஷ்ணுவர்த்தன் அதன் பின் மீண்டும் அஜித்தை வைத்து 'ஆரம்பம்' படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளிவந்த அந்தப் படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
சமீபத்தில் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் அஜித்தை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது விஷ்ணுவர்த்தன் சில கதைகளை அஜித்திடம் கூறியதாகவும் அவற்றை அஜித் கவனமுடன் கேட்டதாகவும் சொல்கிறார்கள். தற்போது 'என்னை அறிந்தால்' படத்தில் நடித்து முடித்ததும் அஜித், மீண்டும் 'வீரம்' சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தையடுத்து அஜித், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்தாலும் நடிக்கலாம் என்கிறார்கள்.
விஷ்ணுவர்த்தன் தற்போது, ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி நடிக்கும் 'யட்சன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டு முடிப்பதற்கும், அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கும் சரியாக இருக்குமாம். அதனால், அவர்கள் மீண்டும் இணைவதற்கும் வாய்ப்பு அதிகம் என அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.