தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா நட்சத்திரங்கள் இணைந்து சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிட்டன் போட்டியையும் நடத்த இருக்கிறார்கள். வருகிற டிசம்பர் 11ந் தேதி முதல் 14ந் தேதி வரை சென்னை வடபழனி போஃர்ம் மாலில் நடக்கும் இந்த போட்டியில் சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்த கொண்டு பேட்மிட்டன் விளையாடுகிறார்கள். இதில் விளையாடும் அணிகள் பற்றிய விபரங்களை 30ந் தேதி போஃர்ம் மஹாலில் நடக்கும் அறிமுகவிழாவில் அறிவிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை நடிகை அபிநயஸ்ரீயுடன் இணைந்து கிரீன் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற நிறுவனம் நடத்துகிறது. இதுபற்றி நடிகையும், நடன இயக்குனரும், மாஜி கவர்ச்சி நடிகை அனுதாராதாவின் மகளுமான அபிநயஸ்ரீ கூறியதாவது: கிரீன் குருப் நிறுவனம் ஏற்கெனவே இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது. மக்களை மகிழ்விப்பது மட்டுமே இதன் நோக்கம். போட்டியில் 4 அணிகள் மோதுகின்றன. இதில் விளையாடும் நடிகர், நடிகைகள் விபரத்தை விரைவில் அறிவிப்போம். வெற்றி பெறுகிறவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படுகிறது. என்றார்