டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
கோலிசோடா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் படம் பத்து எண்றதுக்குள்ள. ஏ.ஆர்.முருகதாஸின் பட நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், சமந்தா ஜோடியாக நடிக்கும், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பத்து எண்றதுக்குள்ள படத்தில் வில்லனாக விக்ரமுடன் மோதுகிறார் ஹிந்தி நடிகர் அபிமன்யூ சிங். இவர் விஜய்யின் வேலாயுதம், தலைவா படங்களில் சிறிய வில்லன் கேரக்டர்களில் நடித்தவர். வேலாயுதம், தலைவா படங்களில் நடித்ததை விட பத்து எண்றதுக்குள்ள படத்தில் அபிமன்யூ சிங்குக்கு பெரிய வேடமாம். பத்து எண்றதுக்குள்ள படம் வெளியான பிறகு தமிழில் தனக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்கும் என்று அழுத்தமாக நம்புகிறார் அபிமன்யூ சிங். எனவே தனக்காக தமிழ்ப்பட வாய்ப்புகளைத் தேடி படக்கம்பெனிகளை அணுகுவதற்காக சென்னையில் ஒரு லோக்கல் மானேஜரை நியமித்திருக்கிறார் அபிமன்யூ சிங்.