நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
வெங்கட்பிரபுவுடன், சூர்யா முதன்முறையாக இணைந்துள்ள படம் மாஸ். அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு அடுத்து ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்து வருகிறார் சூர்யா. இதேப்போல் வெங்கட்பிரபுவும், பிரியாணி படம் சரியாக போகாததால் இந்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், இப்போது மூன்றாவது நாயகியாக பிரணிதாவும் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில், கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் தோல்வி படமாக அமைய ஆந்திராவுக்கு சென்றார். தற்போது தெலுங்கில் பெயர் சொல்லும்படியான நடிகைகளில் பிரணிதாவும் ஒருவராக வலம் வருகிறார்.
தமிழில் உதயம், சகுனி என தான் நடித்த இரண்டு படங்களும் தோல்வியை கொடுத்ததால் தன் மீது படிந்திருக்கும் தோல்வி கறையை போக்க மாஸ் படத்தில் மாஸாக பணியாற்ற முடிவெடுத்திருக்கிறார் பிரணிதா.
பிரணிதாவுக்கு, மாஸ்... மாஸாக அமையுமா... என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!!