Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தன் படத்துக்கு பிராந்தியின் பெயரை சூட்டிய ஆர்யா...!

25 நவ, 2014 - 16:05 IST
எழுத்தின் அளவு:

'சிவா மனசுல சக்தி' என்ற படத்தை இயக்கிய ராஜேஷ், 'மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்..' என்ற வசனத்தை அப்படத்தில் வைத்தார். 'சிவா மனசுல சக்தி' படத்தின் நாயகனான ஜீவா பேசுகிற அந்த வசனம்தான் இன்றுவரை டாஸ்மாக் பார்களில் சர்வசாதாரணமாக குடிமகன்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் இந்த வசனத்தைப்பற்றிய பேச்சு வந்தால் அதை பேசி நடித்த ஜீவா பேட்டிகளில் எல்லாம் பெருமையடித்துக் கொள்கிறார். 'மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்..' என்ற வசனத்தை எழுதிய இயக்குநர் ராஜேஷ், அடுத்து ஆர்யா, சந்தானத்தை வைத்து 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்தை இயக்குகிறார்.


இந்தப்படத்தை, ஆர்யாவின் சொந்த பட நிறுவனமான தணோ பீப்பிள் தயாரிக்கிறது. 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' என்பது படத்தின் தலைப்பாக இருந்தாலும் இந்த தலைப்பை 'VSOP' என்று சுருக்கமாக குறிப்பிடுகின்றனர் படக்குழுவினர். வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் விளம்பரங்களிலும் டேக்லைனாக 'VSOP' என்றே குறிப்பிட உள்ளனர். ராஜேஷ் ஏற்கனவே இயக்கிய சிவா மனசுல சக்தி படத்தை சுருக்கமாக SMS என்றும், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை OKOK என்றும்தான் அழைத்தனர். அதைப்போலவே 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' என்ற படத்தை 'VSOP' என்றே குறிப்பிடப்படும் என்பது உறுதி.


'VSOP' என்பது புகழ்பெற்ற பிராந்தியின் பெயர். தன்னுடைய படத்துக்கு 'VSOP' என்ற பெயரை வைத்துள்ள ராஜேஷ், படத்திலும் அதே பிராண்ட் மதுவை ஆர்யா குடிப்பதுபோல் காட்சி வைக்க திட்டமிட்டிருக்கிறாராம். காரணம்... தலைப்பிலும், காட்சியிலும் 'VSOP' க்கு விளம்பரம் தேடித்தருவதால் அந்நிறுவனத்திடம் விளம்பரமாக (In Film Ad) சில கோடிகளைக் கேட்கும் திட்டத்திலும் இருக்கிறாராம் தயாரிப்பாளர் ஆர்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in