ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்தவாரம் வெளியான ஹேப்பி எண்டிங் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சைப் அலிகான் முதன்முறையாக கோவிந்தாவுடன் இணைந்து நடித்துள்ள படம் ஹேப்பி எண்டிங். சைப், கோவிந்தாவுடன் இலியானா, கல்கி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ராஜ்-டி.கே என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கி இருந்தார்கள். கடந்த வெள்ளியன்று(நவ., 21ம் தேதி) இப்படம் ரிலீஸானது. ஆனால் வெளியான மூன்று நாட்களில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலாகவில்லை. முதல்நாளில் ரூ.3.40 கோடியும், சனிக்கிழமை ரூ.3.50 கோடியும், ஞாயிறுஅன்று ரூ.4.10 கோடி என சுமார் ரூ.10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து விநியோகஸ்தர்கள் கூறுகையில், ஹேப்பி எண்டிங் படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது, ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கிறது. ஆனால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் மற்ற இடங்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை, அதனால் தான் வசூல் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளனர்.