Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதம் கதம் ரிலீஸ் டிசம்பர்-5 க்கு தள்ளிப்போனது!

25 நவ, 2014 - 10:28 IST
எழுத்தின் அளவு:

கோடம்பாக்கம், ஈரம் உள்பட பல படங்களில் நடித்தவர் நந்தா. இவரது நடிப்பில் உருவான படம்தான் கதம் கதம். இந்த படத்தில் இரண்டாது நாயகனாக நட்டி நடராஜ் நடித்தார். ஆனால் இப்படத்தில் நடித்து வந்தபோது, நட்ராஜ் நடித்து வெளியான சதுரங்க வேட்டை படம் வெற்றி பெற்றது. அதையடுத்து, முதன்மை நாயகனாக நடித்து வந்த நந்தா இரண்டாவது நாயகனாக்கப்பட்டு, நடராஜ் முதன்மை நாயகனாக உருவெடுத்தார். அதனால் இப்போது அவரை முன்னிறுத்தியே, அப்படத்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. நட்ராஜ், நந்தா இருவருமே போலீஸ் வேடங்களில நடித்துள்ள இந்தபடம் ஆக்சன் மட்டுமின்றி காமெடியும் கலந்து உருவாகியிருக்கிறதாம். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட கதம் கதம் படத்தை வெளியிட சரியான நேரம்பார்த்து வந்தனர்.


அந்த வகையில், நவம்பர் 28-ந்தேதி வெளியிட முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதேநாளில் சில பெரிய படங்கள் வெளியாக இருப்பதோடு, எதிர்பார்த்தபடி சரியான தியேட்டர்கள் அமையவில்லையாம். அதனால் இப்போது ரிலீஸ் தேதியை டிசம்பர் 5-ந்தேதிக்கு தளளி வைத்திருககிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in