Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டு வருவார்களா கார்த்திகா, துளசி...?

25 நவ, 2014 - 10:08 IST
எழுத்தின் அளவு:

1980களின் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், மோகன் என அந்த நாட்களில் அவர் ஜோடியாக நடிக்காத ஹீரோக்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய இரு மகள்களையும் தமிழ்த் திரையுலகில் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்தினார். மூத்த மகள் கார்த்திகா 2011ல் வெளிவந்த 'கோ' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். முதல் படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், அதன் பின் பாராதிராஜா இயக்கிய 'அன்னக்கொடி' படம், அவருக்குத் தோல்விப்படமாகவே அமைந்தது. தற்போது 'வா டீல், புறம்போக்கு' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 'புறம்போக்கு' படத்தை கார்த்திகா மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.


ராதாவின் இளைய மகளான துளசி மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரிய இயக்குனர் என்றாலும் படம் தோல்வியடைந்ததால் துளசியை யாரும் கண்டு கொள்ளவேயில்லை. அதன் பின் எப்படியோ 'யான்' படத்தில் நாயகியாக நடித்தார். அந்தப் படம் வந்ததும் தெரியாமல் போய்விட்டது. தற்போது அடுத்த வாய்ப்புக்காக துளசி காத்துக் கொண்டிருக்கிறார்.


1980களில் கொடி கட்டிப் பறந்த நட்சத்திர சகோதரிகள் அம்பிகா, ராதா என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகள்களுக்கு தமிழ்த் திரையுலகில் நல்ல ஒரு இடத்தைத் தேடிக் கொடுக்க ராதா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறாராம். அடுத்த முறை கதை கேட்கும் போது மிகவும் கவனமாகக் கேட்டு, நல்ல படங்களையும், நல்ல கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்வு செய்யப் போகிறாராம். அப்படி யாராவது கதையையும், கதாபாத்திரங்களையும் வைத்திருந்தால் இப்போதே அவர்களை அணுகலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in