ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் புரோமோஷன் பாடலில், இயக்குனர் பிரபுதேவாவின் பேவரைட் பாடலான ஊர்வசி ஊர்வசி பாடல் போன்ற தீம் சாங்கில், அஜய் தேவ்கன் நடனமாட உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் ஜாக்சன் படத்தில், அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்கா, மனஸ்வி மம்கை உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜய் தேவ்கன், தான் நடித்துள்ள கேங்ஸ்டர் பேபி, பஞ்சாபி மஸ்தி உள்ளிட்ட படங்களின் புரோமோ நிகழ்ச்சிகளில் நடனமாடி அசத்தியுள்ளார். ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் புரோமோ நிகழ்ச்சியில், பாடலுக்கு நடனம் ஆடியுள்ளதோடு மட்டுமல்லாது, தனது உடற்கட்டை காண்பிக்கும் நிகழ்ச்சியாகவும் அதனை அஜய் தேவ்கன் மாற்றினார். 1990ம் ஆண்டில், இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட காதலன் படத்தில் இடம்பெற்ற "ஊர்வசி ஊர்வசி" பாடலை அடிப்படையாக கொண்டு, ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் தீம் சாங்கை, பிரபுதேவா உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.