தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இளையராஜா பாதி ஏ.ஆர்.ரஹ்மான் பாதி என்று சொல்லும் அளவுக்கு தனக்கு என்று தனி பாதையில் பயணித்து வருகிறார் இசையமைப்பாளர் டி.இமான். தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து வரும் டி.இமான், பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே இருந்து வருகிறார். மைனா, கும்கி படங்களைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கத்தில், உருவாகிவரும் கயல் படத்திற்கும் டி.இமான்தான் இசையமைத்திருக்கிறார். டி.இமான் இசையமைப்பில் கயல் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தின் பாடல்களைக் கேட்ட விஜய், அவற்றை மெய்மறந்து கேட்டு ரசித்தாராம். ரசித்தது மட்டுமல்ல, உடனடியாக இசையமைப்பாளர் இமானுக்கு போன் செய்து, தன் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்.
கயல் படத்தின் என் ஆள பாக்கப்போறேன்..., எங்கிருந்து வந்தாயோ... ஆகிய இரண்டு பாடல்கள்தான் இப்போது விஜய்யின் ஃபேவரைட் நம்பராம். அவருடைய ஐ பாடில் இந்தப் பாடல்கள்தான் ரிப்பீட் மோடில் இருக்கிறதாம். இசையமைப்பாளர் இமான் அறிமுகமானது விஜய்யின் தமிழன் படத்தின் மூலமாகத்தான். தமிழன் படத்துக்குப் பிறகு இந்த வருடம் பொங்கலுக்கு வெளிவந்த விஜய்யின் ஜில்லா படத்திற்கும் இமான்தான் இசையமைப்பாளர். அனேகமாக அட்லீ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்திற்கு இமான்தான் இசையமைப்பாளராக இருப்பார் என்று நம்பலாம்!