டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சீனாவில் சிறந்த துப்பறியும் போலீஸ் அதிகாரி ஜங் ஹூலிங், ஏழு வருடங்களில் பீஜிங் தெருக்களில் குற்றம் புரியும் 1600 கிரிமினல்களை கைது செய்திருக்கிறார். பிக்-பாக்கெட் அடிப்பவர்கள், பெண்களை பைகளை எடுத்து கொண்டு ஓடுபவர்கள் என்று தெருவில் கிரைம் செய்பவர்களை மேம்பாலத்தில் நின்று கொண்டு தன் கைகளில் உள்ள மினி கேமராவில் பதிவு செய்து உதவியாளர்களுக்கு உடனுக்குடன் உத்தரவுகள் கொடுத்து கைது செய்ய செய்கிறார்.
ஏமாறக்கூடிய பொதுமக்கள், கார் வைத்திருப்பவர்களை குறிவைத்து கிரிமினல்கள் வேகமாக செயல்படுவது அதையும் மீறி இன்ஸ்பெக்டர் ஜங், ஓவர் டேக் பண்ணுவது பல நிகழ்ச்சிகளை தத்ரூபமாக பீஜிங் தெருக்களில் படமாக்கியிருக்கிறார்கள். ஜோசியம் சொல்வதாக இளம் பெண்களை ஏமாற்றும் டுபாக்கூர் பேர்வழிகளை மடக்கி பிடிக்கிறார்.
வேண்டுமென்றே காரின் முன்பு விழச்செய்துஆ கார்காரர்களுடன் சண்டை போட்டு பணம் பறிப்பது சிறு குழந்தைகளை கடத்துவது போன்ற குற்றங்களையும் ஜங் உடைக்கிறார். எல்லாமே தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள். நம்மூரில் போன்று சீனாவிலும் போலீஸ்க்காரர்களுக்கு தங்களது கடமையை செய்ய பல பிரச்னைகள் வருகிறது.
சீனா சமீபகாலத்தில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் நன்கு காணமுடிகிறது. சென்னை, அண்ணாசாலை போல பல மடங்கு அகலமான ஆறு பாதைகள் டிராபிக் செல்லும் சாலைகளை பார்த்து பெருமூச்சு விட தோன்றுகிறது.
பல பிரபல பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், டிவி., செய்திவாசிப்பவர்கள், நிர்வாகிகள் இந்தப்படத்தில் பல கேரக்டர்களில் தாமே முன் வந்து நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-