தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை நடிப்பு படத்தயாரிப்பு என பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து பாலிவுட் படத்துக்கு இசையமைக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்து சூப்பர் ஹிட்டான படம் - பொல்லாதவன். இந்தப் படத்தை தற்போது ஹிந்தியில் ரீ-மேக் செய்கிறார்கள்.. கன்ஸ் ஆப் பெனாரஸஸ்(GUNS OF BENARES) என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை சேகர் சூரி இயக்குகிறர். இப்படத்தில் தனுஷ் நடித்த கேர்கடரில் கரன்நாத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நாதாலியா கௌர் நடிக்கிறார். தமிழில் டேனியல் பாலாஜி நடித்த கேரக்டரில் ஹிந்தியில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். இவர்களுடன் வினோத் கன்னா, சில்பா ஷிரோத்கர், அபிமன்யூ சிங் முதலானோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் குமார் ஏற்றிருக்கிறார். பாடல்களுக்கான இசையை அமைக்க ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நேரமில்லை என்பதால் சோஹாலி சென் இசையமைக்கிறாராம்.