இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வைரமுத்துவின் மகனான பாடலாசிரியர் மதன் கார்க்கி அடிப்படையில் கம்ப்யூட்டர் என்ஜினியர். எனவே கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சார்ந்த ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ்ச்சொல்லை கண்டுபிடித்து பிரபலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். படத்துக்குப் படம் தமிழுக்கு புதிய புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்கிறார். இதை லிரிக் என்ஜினியரிங் என்று குறிப்பிடுவார் மதன் கார்க்கி. அட்டகத்தி தினேஷ், நகுல், பிந்துமாதவி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில்,
அலைவரிசை மாற்றவே
தொலை இயக்கி அழுத்தவும்!
தலை எழுத்தை மாற்றவே - உன்
மூளையை நீ அழுத்தவும்!
என்ற பாடலை எழுதி இருக்கிறார்.
அலைவரிசை மாற்றவே என்ற இந்தப் பாடலில் ரிமோட் கண்ட்ரோல் சாதனத்துக்கு அழகிய தமிழ்ச்சொல்லை கண்டு பிடித்து பயன்படுத்தி இருக்கிறார் மதன் கார்க்கி.
என்ன சொல்? ரிமோட் கண்ட்ரோலுக்கு கார்க்கி கண்டுபிடித்த வார்த்தை....தொலை இயக்கி...!
அட...நல்லா இருக்கே!