ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உடல் உறுப்பு தானம் பற்றி சமூகத்தில் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் சென்னையில் ஹிதேந்திரன் என்ற இளைஞனின் பெற்றோர், மூளைச் சாவு அடைந்த தன் மகனின் உறுப்புகளை தானம் செய்தது. அந்த சம்பவம் மலையாளத்தில் டிராபிக் என்ற படமாக வந்ததும் இன்னும் விழிப்புணர்வு அதிகமானது. அதே படம் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அந்த படத்தில் சூர்யா தோன்றி உடல் உறுப்பு தானம் பற்றி பேசினார். ஆரம்பம் முதலே உடல் உறுப்பு தானம் பற்றி பேசி வரும் நடிகர்களான கமல், சரத்குமார் ஆகியோர் ஏற்கெனவே உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டனர். தற்போது சூர்யாவும் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருக்கிறார்.
சமீபத்தில் உடல் உறுப்புதானம் தொடர்பாக ஒரு பேரணியை அவர் தொடங்கி வைத்தார். அதனை ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனத்தின் மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். இவர்கள் தவிர நடிகை சினேகாவும், அவரது கணவர் பிரசன்னாவும் ஏற்கெனவே உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.