'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தோஷ் சிவனின் உதவியாளரும் உருமி படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கி உள்ள படம் பப்பரப்பம். இதில் நான் மகான் அல்ல, யாழ் படங்களில் நடித்த வினோத் ஹீரோவாக நடித்துள்ளார். இஷாரா, யாமினி ஹீரோயின்கள். படத்தை விளம்பரம் செய்வதற்காக ஹீரோ, ஹீரோயின் உள்பட படக்குழுவைச் சேர்ந்த சுமார் 100 பேர் பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையிலான சாலையை சுத்தம் செய்தனர்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் சசிகுமாரன் கூறியதாவது: "ஊரை சுத்தம் செய்வதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். ஒரு மணிநேரம் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கலைந்து செல்லவில்லை. காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை சுத்தம் செய்தோம். இந்த பணியை ஒரு நாளில் முடிக்க மாட்டோம். தமிழ்நாடு முழுவதும் சென்று படம் வெளிவரும் வரை இந்த துப்புரவு பணியை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, படத்தையும் விளம்பரம் செய்வோம். மரணத்தை முத்தமிட்டு திரும்பிய ஒருவன் வாழ்க்கையில் சாதித்த கதை. படத்திலும் மக்களுக்கு நல்ல மெசேஜ் சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் சசிகுமாரன்.