ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராம் கோபால்வர்மாவின் ஐஸ்க்ரீம் 2 படத்தைப் பற்றி கடந்த சில மாதங்களாகவே, பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த்து. சக்ரவர்த்தி, நவீனா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படம், கடந்த வெள்ளிக்கிழமை அன்றுதான் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே, படத்திற்கு எந்தவிதமான வரவேற்பும், நல்ல விமர்சனமும் இல்லாமல் போய்விட்டது. இரண்டே நாட்களில், படத்தை பல தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டதாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் முதல் பாகம், ஐந்து மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது.
தமிழில் “வல்லினம், மறுமுனை” படங்களில் நாயகியாகவும், தற்போது திலகர் என்ற படத்திலும் நாயகியாகவும் நடித்து வரும் மிருதுளா, அவருடைய பெயரை நவீனா என்று மாற்றிக் கொண்டு ஐஸ்க்ரீம் 2 படத்தில் நாயகியாக நடித்தார். அவருடைய மிகவும் கிளாமரான, கவர்ச்சியான புகைப்படங்கள் கடந்த சில மாதங்களாகவே, பரபரப்பாக பேசப்பட்டன. இந்த படத்தின் இரண்டு பாகங்களையும், சில லட்சங்கள் மட்டுமே செலவழித்து தயாரித்ததாகவே, ராம் கோபால் வர்மா குறிப்பிட்டிருந்தார்.