ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்யின் தமிழன் படத்திற்கு இசையமைத்தவர் டி.இமான். அதன்பிறகு ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். என்றபோதும், அவரது பாடல்கள் பேசப்படவில்லை. இந்த நிலையில், பிரபுசாலமனுடன் அவர் இணைந்த மைனா படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியதோடு, அதையடுத்து, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு, ரம்மி, ஜில்லா என வரிசையாக ஹிட் கொடுத்து இப்போது பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார் இமான்.
அதனால் அவரது கைவசம் கயல், புறம்போக்கு, வெள்ளக்கார துரை, ரஜினிமுருகன் உள்பட 10 படங்களுக்கு மேல் உள்ளது. இதில் கயல் படத்தின் ஆடியோ சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. பிரபுசாலமன்-இமானின் கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும் என்றொரு செண்டிமென்ட் உருவாகி விட்டதால், அந்த படத்தின் பாடல்கள் வந்ததும் கோலிவுட்டின் பிரபல ஹீரோக்களே அந்த பாடல்களை கேட்டு ரசித்தார்களாம்.