Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஈரானிய படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

24 நவ, 2014 - 10:19 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் பிரபலமான ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம் இயக்கிய ரோஜா, பம்பாய் படங்கள் இந்தியிலும் வெளியானதால், பாலிவுட்டிலும் பேசப்படும் இசையமைப்பாளர் ஆனார். அதன்பிறகு இந்தியிலும் அதிகப்படியான படங்களுக்கு இசையமைத்து வந்தார். பின்னர், ஹாலிவுட்டுக்கு சென்ற ரகுமான். ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் ஆஸ்கர் விருதுகள் பெற்றார்.


இதனால் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். இந்தநிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜீத் என்பவரை ரகுமான் சந்தித்தபோது, அவரது இசை குறித்து தனது கருத்துக்களை சொன்னாராம். அதோடு, மேற்கத்திய இசைக்கே நீங்கள் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். உங்களது பாரம்பரிய இசைக்கருவிகளைக்கொண்டு இசையமைக்க வேண்டியதானே என்றும் கேட்டுக்கொண்டாராம்.


அதையடுத்து, அதற்கான சந்தர்ப்பங்கள் வரும்போது எங்கள் பாரம்பரிய இசைக்கருவிகளைக்கொண்டு இசையமைப்பேன் என்று சொன்னவரிடத்தில்,, தான் இயக்கும் ஒரு படத்துக்கும் அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டாராம். அதற்கு உடனே சம்மதம் சொன்ன ரகுமான், ஈரானின் பாரம்பரிய இசைக்கருவிகளைக்கொண்டு அவரது படத்துககு தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறாராம்.


தற்போது தமிழில், காவியத்தலைவன் படத்திற்கு இசையமைத்து விட்ட ரகுமான், அடுத்தபடியாக லிங்கா, ஐ பட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையே ஈரானிய படத்தோடு இரண்டு ஹாலிவுட் படங்களுக்கும், தற்போது இசையமைத்துக்கொண்டிருக்கிறாராம். ஆக, உலக அளவில் பிரபலமாகி விட்ட ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கூடாரம் எந்நேரமும் பிசியாகவே இருக்கிறது. முக்கியமாக, தமிழ்ப்படங்களுக்கும் அமெரிக்காவில் உள்ள ரெக்கார்டிங் தியேட்டரிலேயே இசையமைக்கிறார் ரகுமான்.


Tags- a.r.rahman. majeeth. kaviyathalaivan. linga. i. america.


ஏ.ஆர்.ரகுமான், மஜீத், காவியத்தலைவன், லிங்கா, ஐ, அமெரிக்கா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in