தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் இயக்கி உள்ள படம் கப்பல், இந்த படம் நட்பை பற்றி புதுமையாக சொல்கிற படம். கண்ணன் என்ற புதுமுகம் இசை அமைத்துள்ளார், மதன் கார்க்கி பாடல்களை எழுதி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று (நவ 22) நடந்தது. விஜய் வெளியிட விக்ரம் பெற்றுக் கொண்டார். நட்பு பற்றிய படம் என்பதால் விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தங்கள் நண்பர் யார் என்பதை பற்றி பேச வேண்டும் என்று தொகுப்பாளர் திவ்யதர்ஷினி வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்று அவர்கள் தங்கள் நண்பர்கள் பற்றி பேசினர். அது வருமாறு:
விஜய்:
என்னோட பெஸ்ட் பிரண்ட், பேமிலி பிரண்டுன்னா அது கென்னி. அதுதான் உங்கள் விக்ரம். இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டால் சினிமா பற்றி பேச மாட்டோம் அதை தாண்டி நிறைய பேசுவோம். எனது குழந்தைகளும், அவரது குழந்தைகளும் பிரண்ட். என் மனைவியும், அவர் மனைவியும் பிரண்ட். அவரோட ஐ பட டீசர் பார்த்து மிரண்டுட்டேன். மெர்சலாயிட்டேன் பாட்டை கேட்டு மெர்சலாயிட்டேன். ஐ படம் பார்க்க ஐ ஏம் வெயிட்டிங்.
விக்ரம்
விஜய் பேசின பிறகு என்னோட பெஸ்ட் பிரண்ட் யார்னு நீங்களே தெரிஞ்சிகிட்டிருப்பீங்க. அடுத்து ஷங்கர் சார். அவரோட ஒர்க் பண்றப்போ என்னை நானே மெருகேற்றிக் கொள்ள முடியுது. ஒரு நடிகன் இயக்குனர்ங்றதை தாண்டி ரெண்டுபேருக்கும் நல்ல பிரண்ட்ஷிப் இருக்கு.
ஷங்கர்
21 வருடமாக என்னோட பயணிக்கிற ஏ.ஆர்.ரகுமான், நான் கூப்பிட்டதும் வந்துடுறேனுங்கண்ணா என்ற வந்து நிக்குற விஜய், என்ன சொன்னாலும் அதுவா மாறி வந்து நிக்குற விக்ரம் எல்லாருமே என்னோட பிரண்ட்.
ஏ.ஆர்.ரகுமான்
ஷங்கர் உள்பட நான் பணியாற்றுகிற அத்தனை படங்களின் இயக்குனர்களும் என்னோட பிரண்டுதான். நான் அவர்களை அப்படித்தான் பார்க்கிறேன்.