தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோவா திரைப்பட விழாவை ஒட்டி நேஷனல் பிலிம் ஆர்க்கெவ்ஸ் ஆப் இந்தியா, இந்திய திரைப்பட போஸ்டர்களின் பிரத்யேக கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பிரபல சீன நடிகை ஜங் ஸிய் கண்காட்சியை திறந்துவைத்தார். இந்தியாவின் முதல் பேசும் படமான அலம் ஆரா -1931 மார்ச் 14ல் ரிலீஸான படம் உள்பட 90 படங்களின் போஸ்டர்கள் அழகாக வைக்கப்பட்டிருக்கின்றன. இசை, பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இசைக்குப் புகழ் பெற்ற பல படங்களின் போஸ்டர்கள், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடியவர், பாடல் அமைக்கப்பெற்ற ராகங்களின் பெயர்கள் உள்பட, நிறைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எம்.எஸ்.சுப்புலெட்சுமி நடித்த மீரா (1945), ஜெமினியின் சந்திரலேகா (1948), ஜெமினியின் ஒளவையார் (1953). 59 பாடல்கள் ஒளவையாரில் இடம்பெற்றுள்ளன. எழதியவர் கொத்தமங்கலம் சுப்பு, வி.சாந்தாராம் இயக்கிய ஜனக் ஜனக் பாயல் பாஜே (1955), ஏ.வி.எம்.மின் மை சுப் ரஹீங்கி (1962), கர்ணன் (1964), 17 பாடல்கள். மிகவும் பிரபலமான பாடல் - உள்ளத்தில் நல்ல உள்ளம் - சீர்காழி கோவிந்தராஜன் பாடியது. ஷோலே (1975), ஆர்.டி.பர்மன் இசை, ரமேஷ் சிப்பி இயக்கம், சங்கராபரணம் (1979), கே.விஸ்வநாத் இயக்கம், கே.வி.மகாதேவன் இசை. திலீப் குமார், வைஜெயந்தி மாலா நடித்த தேவதாஸ் (1955), ராம்ராஜ்யா (1943), மதர் இந்தியா (1957) மொகலே ஆஸாம் (1960), செம்மீன் (1965). முப்பது விருதுகள் பெற்று சாதனை படைத்த சிரி சிரி முவா, கே.விஸ்வநாத் இயக்கம், கே.வி. மகாதேவன் இசை. தாஸரி நாராயணராவ் இயக்கிய மேக சந்தேசம் உள்பட 90 போஸ்டர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. சினிமா ரசிகர்களுக்கு அரிய விருந்து. நவம்பர் 30 வரை இந்த கண்காட்சி திறந்திருக்கும். ஒளவையார் உள்பட பல திரைப்படங்கள் கொண்ட கிரீட்டிங் கார்டுகளும் அங்கு விலைக்கு கிடைக்கிறது. இதன் விலை 15 ரூபாய்.
கோவாவில் இருந்து எஸ்.ரஜத்.