இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா தற்போது இயக்கி வரும் படம் மானே தேனே பேயே. இதில் ஆரி ஹீரோவாக நடிக்கிறார். பெங்காலி நடிகை சுபஸ்ரீ கங்குலி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஆரியும், சுபஸ்ரீ கங்குலியும் கடலில் குளித்துக்கொண்டு ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
"ஆரி சாப்ட்வேர் என்ஜீனியராக நடிக்கிறார். டேனியல் பாலாஜிக்கு ஒரு சவாலான வேடம் இருக்கிறது. எனது முந்தைய படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஜில்லுன்னு ஒரு காதல் லவ் சப்ஜெக்ட், நெடுஞ்சாலை ஆக்ஷன் சப்ஜக். இது சமகாலத்து இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிற படமாக இருக்கும். தொடர்ந்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி ஒரே கட்டதில் முடிக்கிறோம்" என்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.