வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
டிசம்பர் மாதம் என்றாலே இசைத்திருவிழா ஆரம்பமாகி விடும். இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகிலும், டிசம்பர் மாதம் இசைத்திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு எதிர்பார்ப்பில் உள்ள சில படங்களின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் 'என்னைஅறிந்தால்', ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் 'நண்பேன்டா' ஆகிய படங்களின் இசை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, விஷ்ணு, விஷால், நந்திதா, ஐஸ்வர்யா நடிக்கும் 'இடம் பொருள் ஏவல்', ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிக்கும் 'வை ராஜா வை' ஆகிய படங்களின் இசை அடுத்த மாதம் வெளியாக வாய்ப்புள்ளது.
டி.இமான் இசையமைப்பில், எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் 'வெள்ளைக்காரதுரை' படத்தின் இசை வெளியாகலாம்.
அனிருத் இசையமைப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாநடிக்கும் 'காக்கிச்சட்டை', அனூப்கோபால் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள 'ஆகோ' படங்களின் இசையும் அடுத்தமாதம் வெளியாகும் என தெரிகிறது.