இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி, வில்லன், குணசித்திர நடிகர் என்பதை தாண்டி ஆக்ஷன் ஹீரோவான பிறகுதான் கேரக்டரின் பெயரைக் கொண்ட டைட்டில்களை அவரது படத்துக்கு வைத்தார்கள். பில்லாதான் முதல் கேரக்டர் டைட்டில். அதற் பிறகு அவர் காளி, ஜானி, ரங்கா, அன்புள்ள ரஜினிகாந்த், சிவா, அண்ணாமலை, பாண்டியன், வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், பாபா, சிவாஜி, கோச்சடையான் படங்களில் டைட்டில் கேரக்டரில் நடித்தார்.இப்போது லிங்காவில் நடித்து வருகிறார்.
பாபா, கோச்சடையான் தவிர மற்ற எல்லா படங்களுமே வெற்றிப் படங்கள். பாபா ரஜினியை மந்திர சக்தி உடையவராக காட்டியது. கோச்சடையான் அவரது அனிமேஷன் உருவத்தை காட்டியது, இரண்டையும் ரசிகர்கள் ஒத்துக் கொள்ளாததால் தோல்வி அடைந்தது. லிங்கா இந்த இரண்டு வகைக்குள்ளும் வராத படம். அதனால் வெற்றி உறுதி என்பது சினிமா பார்வையாளர்களின் கருத்து.