'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமீர் கான் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள பி.கே. படத்தில் அனுஷ்கா சர்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு போட்டியாக, ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள பாம்பே வெல்வெட் வெளியாக இருந்தது. ஆனால், திடீரென்று, பாம்பே வெல்வெட் பட வெளியீடு, அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படம் வெளியீடு தாமதமான நிலையிலும், அப்படத்தின் டிரைலர், பி.கே.படத்துடன் இணைந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களிலும், அனுஷ்கா சர்மா, முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாது, விரைவில் வெளியாக உள்ள என்ஹெச்-10 படத்தின் டிரைலரும், பி.கே. படத்துடன் இணைந்து திரையிடப்பட்டு வருகிறது. அனுஷ்கா நடிப்பில், பி.கே. படத்தை விரைவில் காண உள்ள அவரது ரசிகர்களுககு, இலவச இணைப்பாக, அனுஷ்கா சர்மா நடித்துள்ள பாம்பே வெல்வெட் மற்றும் என்.ஹெச்-10 படங்களின் டிரைலர்களும் திரையிடப்பட்டு வருவது மும்மடங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.