இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜித்தை வைத்து ஆரம்பம் படத்தை இயக்கிய விஷ்ணுவர்தனுக்கு, மீண்டும் கால்ஷீட் தர இருக்கிறார் அஜித். ஏற்கனவே உள்ள கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு வர தாமதமாகும் என்றும் அப்போதே சொல்லிவிட்டார் அஜித். எனவே இந்த இடைவெளியில், ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன்.
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து தன் தம்பி கிருஷ்ணாவையும் நடிக்க வைக்கிறார் விஷ்ணுவர்தன். பிரபல வாரஇதழ் ஒன்றில் எழுத்தாளர்கள் சுபா எழுதிய தொடர்கதையைத்தான் சினிமாவுக்காக சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து யட்சன் படமாக உருவாக்கி வருகிறார்கள். யட்சன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிப்பதால் கௌரவ தோற்றத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி அடிபட்டது. பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. அதே சமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர் மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மைதான். யட்சன் படத்தின் ஒரு காட்சியில் வீரம் படத்திற்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் மேல் ஏறி ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் ஆர்யா உடன் உண்மையான தல ரசிகர்கள் கலந்து கொண்டு நடித்துள்ளனர்.