விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
கோவா திரைப்பட விழாவில், 2014ம் ஆண்டு மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களது படங்கள் திரையிடப்பட உள்ளன. ஏ.நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகர்ஜூனா, பேரன் நாக சைதன்யா நடித்த மனம் படம், பாலுமகேந்திராவின், மூன்றாம் பிறை(1982), இந்தி நடிகர் பரூக் ஷேக் நடித்த சஷ்மே பதூர்(1981), இந்தி நடிகை நந்தா நடித்த சார் திவாரி(1961), கன்னட எழுத்தாளரின் கட்டஷ்ரத்தா(1977), நடிகை சுசித்ரா சென் நடித்த சப்தபதி(1961), கேமராமேன் வி.கே.மூர்த்தியின், காகஜ்காபூல் (இந்தி 1959), 102 வயது வாழ்ந்த பழம்பெரும் நடிகை ஸோரா செய்கல் நடித்த நீசா நகர்(1946), வங்காள இயக்குநர் அஞ்சன் தாஸின், இடி ஸ்ரீகன்டா(2004) போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன.
இதேப்போல் நாட்டியத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்ட நர்த்தகி(வங்காளம் 1940), வசந்த சேனா(கன்னடம் 1941), தில்லானா மோகனம்மாள்(தமிழ் 1968), உதய சங்கர் நடித்த கல்பனா(1948), வி.சாந்தாராம் இயக்கிய ஜனக் ஜனக் பாயல் பாஜே(1955), வைஜெயந்தி மாலா சுனில் தத் நடித்த அம்ராபாலி(1966), ஜி.வி.அய்யரின் கன்னடப்படம் ஹம்ச கீதே(1975), ஹேமமாலினி நடித்த கிணரா(1977), கமல் ஜெயப்பிரதா நடித்த சாகர சங்கமம்(1983), சுதா சந்திரன் நடித்த மயூரி (1985), ஐஸ்வர்யா ராய் நடித்த தால்(1999), உம்ரோ ஜான் (2006), ஷாரூக்கான் மாதுரி தீட்சித் நடித்த தில் தோ பாகல் ஹை, மோகன்லால்-சுஹாசினி நடித்த வனப்ரஸ்தம்(மலையாளம் 1999), தேவதாஸ்(2002), அமீர்கான்-கத்ரீனா கைப் நடித்த தூம்-3 போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.
* இந்தியன் பனோரமாவிற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ்படம் குற்றம் கடிதல் திரைப்படம் மட்டுமே.
* ரஜினியின் கோச்சடையான் 3டி படமும் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-