டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் ஆதிராம். இவர் தமிழில் இயக்கிய சிலந்தி படம்தான் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட முதல் சிறு பட்ஜெட் படம். மோனிகா கவர்ச்சியாக நடித்த ஒரே படமும் இதுதான். ஆதிராம் தற்போது ரணதந்திரா என்ற கன்னட படத்தை இயக்கி வருகிறார். இதில் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மருமகன் விஜயராகவேந்திரா ஹீரோவாக நடிக்கிறார். ஹரிப்ரியா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தப் படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் தயாராகிறது. தமிழில் அதர்வணம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார், எம்.கார்த்திக் இசை அமைத்திருக்கிறார். படப்படிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. சிலந்தியில் மோனிகாவை கவர்ச்சியாக நடிக்க வைத்ததைப்போல இதில் ஹரிப்ரியாவை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதிராம்.