Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படத்தில் யார் முதன்மை நாயகி!

20 நவ, 2014 - 08:28 IST
எழுத்தின் அளவு:

இந்திய சினிமாக்களில் பரவலாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். அதிலும் இந்தி, தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து பரபரப்பு கூட்டியவர். அதையடுத்து, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி பிடித்ததையடுத்து, தற்போது தனது கவர்ச்சி அட்டகாசத்தை குறைத்து விட்டு ஓரளவு அடக்கி வாசித்து வருகிறார் ஸ்ருதி.


ஆனபோதும், நயன்தாரா, தமன்னாக்களுக்கு மனதளவில் அதிர்ச்சி கொடுக்கும் கவர்ச்சியை வெளிப்படுத்துவதை நிறுத்தாத ஸ்ருதிஹாசன், பூஜையைத் தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கும் மாரீசன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடிக்கிறார். இதேபடத்தில் ஹன்சிகாவும் இன்னொரு நாயகி என்றபோதும், கதைப்படி ஸ்ரீதேவியின் மகளாக நடிக்கும் அவரது போர்ஷன் குறைவான நேரமே படத்தில் வருவதாக கூறப்படுகிறது.


மேலும், மாரீசன் படத்தில் தான் நடிப்பது பற்றி அவ்வப்போது டுவிட்டர் வாயிலாக உறுதிபடுத்திக்கொண்டே வந்த ஸ்ருதியிடம், படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருக்கிறீர்களே. யார் முதன்மை நாயகி? என்று கேட்டவர்களிடம், அது சஸ்பென்ஸ் என்று கூறி மெளனம் சாதித்து விட்டாராம். அதோடு, என்னைப்பொறுத்தவரை எத்தனை கதாநாயகிகள் படத்தில் இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எனக்குரிய கேரக்டர் பிடித்திருநதால் அதை சரியாக செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருப்பேன். இன்னொரு ஹீரோயின் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதைகூட நான் கேட்க விரும்பியதில்லை. அதேபோல்தான் இந்த படத்திலும் எனக்குரிய கேரக்டரை மட்டுமே கேட்டு நடிக்கிறேன். அதனால் யாருடைய கேரக்டர் முக்கித்துவம் வாய்ந்தது என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in