ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித், நயன்தாரா, ராணா, ஆர்யா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான ஆரம்பம் திரைப்படம், விரைவில் ஹிந்தியில் "பிளேயர் ஏக் கில்லாடி" என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராக இருந்த இந்த திரைப்படம், தமிழில் மட்டுமே வெளியானது. தற்போது, இந்த படம், ஹிந்தியில் டப் செய்யப்பட உள்ளது. சினி கார்ன் நிறுவனம், டப்பிங் உரிமையை பெற்று, படத்திற்கு "பிளேயர் ஏக் கில்லாடி" என பெயரிட்டு விரைவில் பாலிவுட் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.
தமிழ் ரசிகர்களால் மட்டுமே தல என்று அழைக்கப்பட்டு வந்த அஜித், விரைவில் பாலிவுட் பட ரசிகர்களாலும் அழைக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.