Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காதல் கதைகளை படிக்க நான் டீன் ஏஜ் பெண் அல்ல : இலியானா

19 நவ, 2014 - 16:05 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் தனி முத்திரை பதித்துள்ள இலியானா டி குருஸ், பார்ஃபி, பாடா போஸ்டர் நிகாலா ஹீரோ, மெயின் டேரா ஹீரோ உள்ளிட்ட படங்களின் மூலம் பாலிவுட்டிலும் வெற்றிவாகை சூடியுள்ளார். தற்போது அவர், நடித்து இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ள ஹாப்பி எண்டிங் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். ஹாப்பி எண்டிங் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து இலியானா கூறியதாவது,




எழுத்தாளர் கதாபாத்திரம்




ஹாப்பி எண்டிங் படத்தில், நான் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எனது பெயர் ஆஞ்சல். ஆஞசல், ரொமான்டிக் நாவல்களை அதிகம் எழுதுபவர், ஆனால், அது காதல் மற்றும் காதல் சார்ந்த கதையாக இருக்காது. ஆனால், அவரது நாவலில், இனிமையான முடிவு இருக்கும். நடைமுறை வாழ்க்கையில், எப்போதுமே, காதல் கதைகளில், இனிமையான முடிவு இருக்காது, ஆனால், இதில், இனிமையான முடிவுடன் காதல் கதை உருவாக்கப்பட்டிருக்கும். ஆஞ்சல் கதாபாத்திரத்தை, நான் உணர்ந்து நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம், எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது.


எனக்கு நேரெதிர் கதாபாத்திரம்




ஹாப்பி எண்டிங் படத்தில், ஆஞசல் என்ற எழுத்தாளராக நான் நடித்துள்ள கதாபாத்திரம், நடைமுறை வாழ்க்கையில், எனக்கு நேரரெதிர் கதாபாத்திரம் ஆகும். சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற மனம் கொண்ட நான், முழுவதும் பக்குவப்பட்ட கதாபாத்திரமாக இப்படத்தில் நடித்துள்ளேன். நவீன மங்கையாக திகழ்ந்து வரும் தான், இப்பட கதாபாத்திரத்தில், முழுவதும் வேறுபட்டு நடித்துள்ளேன். நான் எளிதாக உணர்ச்சிவசப்படுபவள். ஆனால், இப்படத்தில், அக்கதாபாத்திரம் அவ்வாறு இல்லை. நான் நடைமுறை வாழ்க்கையில், காதல் நயம் மிக்க வாழ்க்கையை வாழ ஆசைப்படுபவள். ஆனால், ஆஞ்சல் கதாபாத்திரம், காதல் கதைகளில் கூட, ரொமான்டிக் வந்துவிடக்கூடாது என்பதில், மிகுந்த கவனத்துடன் இருப்பவளாக, இந்த கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


காதல் கதைகளை படிக்க விருப்பமில்லை




ஹாப்பி எண்டிங் படத்தில், நான் ரொமான்டிக் நாவல்களை எழுதும் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால், நான் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனக்கு காதல் கதைகளை படிக்க விருப்பம் இல்லை. ஏனெனில், டீன் ஏஜ் வயதினருக்கே, காதல் கதைகளை படிக்க விருப்பம் இருக்கும். நான் ஒன்றும் டீன் ஏஜ் வயது பெண அல்ல.


என்னுடைய நிஜ வாழ்க்கையிலேயே, 2 முதல் 3 காதல் கதைகள் உள்ளன.


சயீபின் நடிப்பு வியப்பளிக்கிறது...!




சயீப் அலி கான் உண்மையிலேயே ஜென்டில்மேன். முதல்முறையாக, சயீப்புடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் நடிக்கையில், ஜீனியர் நடிகர், நடிகைகளுக்கு ஏற்புடைய சூழ்நிலையை அவரே ஏற்படுத்தித் தந்துவிடுவார். அதனால், சயீப்புடன் நடித்தது பெரிய விசயமாகவே தெரியவில்லை. பல நேரங்களில், எனக்கு தெரியாததை, சயீப்புடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர் எத்தனை முறை கேட்டாலும், முகம் கோணாமல், சிரத்தையுடன் கற்றுத் தந்தார்.


நான் அதிகம் உணர்ச்சிவசப்படுபவள்


நிஜ வாழ்க்கையில், நான் அதிகம் உணர்ச்சிவசப்படுபவள். சின்ன விசயத்திற்கு கூட, நான் அழுது விடுவேன். சில நேரங்களில், இதன் காரணமாக, சில நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்துள்ளேன். என்னை யாராவது காயப்படுத்தினால், சாப்பிடாமல்,ஏன், எதுவும் குடிக்காமல் கூட இருந்துள்ளேன். நான் மிகவும் உணர்ச்சிவசப்படும் நிலையை அறிந்த எனது குடும்பத்தினர், எனக்கு பல சமயங்களில் ஆதரவு அளித்து வந்துள்ளனர்.


சிறந்த படங்களை தேர்வு செய்வது கடினம்


பாலிவுட்டில், நான் ஒரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அதற்காக, பாலிவுட் திரையுலகில் இருந்து எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்பது அர்த்தமல்ல. எனக்கு பாலிவுட்டில், பல வாய்ப்புகள் வந்த போதிலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான, சிறந்த திரையம்சங்கள் கொண்ட படங்களை தேர்வு செய்வது என்பது எனக்கு கடினமானதாக உள்ளது என்பது மறுப்பதற்கில்லை. அதன் காரணமாக, நான் சிறிய அளவில் மட்டுமே படங்களை தேர்வு செய்து, அதில் முழு ஈடுபாட்டுடன் நடித்து, அப்படங்களை ஹிட் படமாக ஆக்கி வருகிறேன்.


ஹாப்பி எண்டிங் எனக்கு முக்கிய படம்


மற்ற பாலிவுட் படங்களை போன்று அல்ல ஹாப்பி எண்டிங் படம். இது ஒரு வித்தியாசமான படம். இந்த படத்தில், மற்ற எவ்வித படங்களில் நடித்திராத, முற்றிலும் வேறுவிதமான கதாபாத்திரத்தில் முதல்முறையாக நடித்துள்ளேன். ஹாப்பி எண்டிங் படம், எனது திரைவாழ்க்கையில், முக்கியமான படம் ஆகும். இந்த படம், ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக இலியானா கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in