தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மராத்தி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த டிம்பிள் சோப்டே, சிகி முத்து என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். தமிழில் யாருடா மகேஷ், கல்கண்டு படங்களில் நடித்தார். ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்பும் டிம்பிள், அதற்காக சண்டைக் கலைகளை முறையாக கற்றுள்ளார்.
"நான் தற்போது சினிமாவில் நடித்தாலும் மராட்டிய நாடக நடிகை என்பதில் எப்போதும் எனக்கு பெருமைதான். அங்கு சரித்திர நாடகங்களில் நடித்தபோது அதற்காக முறையாக கத்திச் சண்டை, களரிச் சண்டை கற்றுக் கொண்டேன். அதன் பிறகு சினிமா நடிகையாக முடிவு செய்ததும் நடனத்தையும், குதிரை சவாரியையும் கற்றுக் கொண்டேன்.
தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். விஜயசாந்தி போன்று ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து எனது சண்டை திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.