தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தி சினிமாவில் தமன்னா பெரிதும் எதிர்பார்த்த படங்கள் ஹிம்மாத்வாலா மற்றும் ஹம்சகல்ஸ். ஆனால் இந்த இரண்டு படங்களும் அவருக்கு தோல்வியை கொடுத்தன. அதன்பின் அவர் நடித்த என்டர்டெயின்மென்ட் படமும் பெரிதாக போகவில்லை. இதனால் இந்தியில் பெரிய ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்த்திருந்த தமன்னாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் அவருக்கு புதிதாக ஒரு இந்திப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக விவேக் ஓபுராய் நடிக்க இருக்கிறார். ''ஆப் லவ் அண் பாலிடிக்ஸ்'' என்ற நாவலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக இருக்கிறது. பிரபல விளம்பர இயக்குநர் ஒருவர் இப்படத்தை இயக்க உள்ளார். முதன்முறையாக தமன்னாவும், விவேக் ஓபுராயும் இணைந்து நடிக்க உள்ளனர். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருக்கிறது.