ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வெற்றிக் கூட்டணியான இயக்குனர் ராஜேஷ், ஆர்யா மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் ஆரம்பமாக உள்ளது. 'அழகுராஜா' படத்தின் படுதோல்விக்குப் பிறகு தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ராஜேஷுக்கு..'நண்பேன்டா...' என தயாரிப்பாளராகவும், நாயகனாகவும் கை கொடுத்திருக்கிறார் ஆர்யா. இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். ராஜேஷ் படத்திற்கு டி.இமான் முதன் முறையாக இசையமைக்கிறார்.
முதலில் இந்தப் படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்கக் கேட்டார்கள் என்றும் அவர் நடிக்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகின. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகமாகவும் இந்தப் படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் இல்லை என இயக்குனர் ராஜேஷ் ஏற்கெனவே மறுத்துள்ளார். 'வீரம்' படத்திற்குப் பிறகு தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த தமன்னாவுக்கு இந்தப் படம் மீண்டும் ஒரு வரவேற்பைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம்.
ராஜேஷ் ஆரம்பத்தில் யுவன்ஷங்கர் ராஜாவுடன் இணைந்து மியூசிக்கலாகவும் அவருடைய படங்களைப் பற்றி பேச வைத்தார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திலும் ஹாரிஸ் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. 'அழகுராஜா' படத்தில் தமன் இசையில் ஒரு பாடல் மட்டுமே ஹிட்டாக அமைந்தது. இப்போது டி.இமான் ராஜேஷுடன் முதன் முறையாக இணைந்திருக்கிறார். இந்தப் புதிய கூட்டணி இசையிலும் சாதனை படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.