மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் ஆரம்பமானது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் நாள் படப்பிடிப்பில் ஹன்சிகா கலந்து கொண்டு விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதன் பின் சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றொரு நாயகியான ஸ்ருதிஹாசன் இன்று முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
சூர்யா நடித்த 7ம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் இதுவரை “3, பூஜை ஆகிய மூன்று தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தமிழில் மிக முக்கியமான முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய்யுடன் தற்போது ஜோடி சேர்ந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திலும் ஜோடி சேர ஸ்ருதி முயற்சித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
விஜய் படத்தில் நடிப்பதைப் பற்றி ஸ்ருதிஹாசன், “புதிய தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக சென்னையில் இருக்கிறேன்...ஹே...” என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தில் விஜய்யுடன் நடிப்பதைப் பற்றியோ, அவருடைய அப்பாவுடன் எண்ணற்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவியைப் பற்றியோ அவர் எதுவும் சொல்லாத்து ஆச்சரியமாக உள்ளது.